உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில்களில் திருட்டு

கோவில்களில் திருட்டு

ஓமலுார்:காடையாம்பட்டி, ஊமகவுண்டம்பட்டியில் நீர்மாரியம்மன், மல்லிகா ஈஸ்வரன், மாரியம்மன் கோவில் ஆகியவை அருகருகே உள்ளன. நேற்று காலை, 3 கோவில்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த தகவல்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்ததில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அதன்படி நீர்மாரியம்மன் கோவிலில் முக்கால் பவுன் தாலி, உண்டியலில் இருந்த பணம், மல்லிகா ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் திருடுபோனது தெரிந்தது. மாரியம்மன் கோவிலில் திருடுபோகவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை