உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வகுப்பறை திறப்பு

வகுப்பறை திறப்பு

தாரமங்கலம் :தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நபார்டு' திட்டத்தில், 2.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக, 10 வகுப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பள்ளியில், சேலம் எம்.பி., செல்வகணபதி குத்துவிளக்கேற்றினார். தி.மு.க., நகராட்சி தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சங்ககிரி, மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள், நகராட்சி கமிஷனர் பாலமுருகன், ஆசிரியர்கள், தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை