மேலும் செய்திகள்
சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
13-Oct-2025
இடைப்பாடி, சாலை பணியாளர்கள், இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன், கும்மியடித்தும், நீதி தராசு ஏந்தியும் நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, 41- மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கும்மி அடித்தும், நீதி தராசு ஏந்தியும் நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில துணைத் தலைவர் சிங்கராயன், கோட்ட செயலர் கலைவாணன், மாவட்ட செயலர் முத்துக்குமரன் அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
13-Oct-2025