உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1 கோடி பனை மரம் வளர்க்க இலக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

1 கோடி பனை மரம் வளர்க்க இலக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

மேட்டூர்: ''தமிழகம் முழுதும் ஒரு கோடி பனை மரம் வளர்க்க இலக்கு நிர்-ணயித்துள்ளோம்,'' என, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறினார்.நீர்நிலைகளில் ஏற்படும் மண் அரிப்பு, நிலச்சரிவுகளை தடுப்-பதில் பனைமரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் தமி-ழகம் முழுதும் ஒரு கோடி பனைமரம் வளர்க்க அரசு திட்டமிட்-டுள்ளது. அதற்கு பனங்கொட்டை நடவு செய்யும் நிகழ்ச்சி கடந்த ஜூலை, 27ல் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. வரும், 29க்குள் ஒரு கோடி பனங்கொட்டை நட இலக்கு நிர்ண-யிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 3 லட்சம் கொட்-டைகள் நடவு செய்யப்படும். இதனால் பனை வளர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜவேலு, ஹரிகிருஷ்ணன் குழுவினர் நேற்று, சேலம் மாவட்டம் பண்ணவாடி, சாம்பள்ளி ஊராட்சி-களை பார்வையிட்டனர்.இதுகுறித்து ராஜவேலு கூறியதாவது: தமிழகம் முழுதும் ஒரு கோடி பனை மரம் வளர்க்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 8 மாவட்டங்களில் காவிரி கரையோரம் பனங்கொட்டைகள் நடவு செய்யப்படும். இதற்கு சேலம் கலெக்டரை சந்தித்து ஆலோ-சித்தோம். அவர் ஆலோசனைப்படி பண்ணவாடி, சாம்பள்ளி ஊராட்சிகளை பார்வையிட்டோம்.சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையம் அணை கரையோரம், 100க்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளை, சோதனை அடிப்ப-டையில் நடவு செய்துள்ளோம். வரும், 8ல் அமைச்சர் மெய்ய-நாதன், பண்ணவாடியில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.மேட்டூர் ஆர்.ஐ., வெற்றிவேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், வன அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை