உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜைசேலம், 'பவுர்ணமியை ஒட்டி, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டன. ஏராளமான பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு பூஜை பொருட்கள், பித்தளை காமாட்சி விளக்கு, குங்கும சிமிழ், புடவை உள்ளிட்ட பிரசாத பை, கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவல் குழு தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை