உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 55 வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கைது

55 வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கைது

சேலம்: சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் பிரம்மமூர்த்தி, 33, பிரபல ரவுடி. இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநில துணைத்த-லைவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, நகை பறிப்பு, அடிதடி உள்ளிட்ட, 55 வழக்குகள் சென்னை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. போலீசார் தேடி வந்த நிலையில், செவ்வாய்பேட்டையில் பிரம்மமூர்த்தியை நேற்று கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்-தனர். இதையறிந்த அவரது ஆதரவாளர்கள், ஸ்டேஷனை முற்று-கையிட்டு, விடுதலை செய்ய வலியுறுத்தினர். போலீசார் பேச்சு-வார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர். செவ்வாய்பேட்டை பகுதியில் கடந்த ஆக.,11ம் தேதி இருதரப்-பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்தாவது குற்றவாளி-யாக சேர்க்கப்பட்ட பிரம்மமூர்த்தி, தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று சிக்கியவரை, காரில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது, கொலை முயற்சி உள்ளிட்ட இரு பிரிவு-களில் கைது செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை