ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல்வர் மீது குற்றச்சாட்டு
சேலம்: இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த, சேலம், சிவதாபுரம் குப்புசாமியின் குடும்பத்தினருக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி, புதிதாக, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டிக்கொடுத்துள்ளார். அந்த வீட்டு சாவியை, அன்புமணி, குப்புசாமி குடும்பத்தினரிடம் வழங்கி கல்வெட்டை திறந்து வைத்தார்.தொடர்ந்து அன்புமணி அளித்த பேட்டி:போராட்டங்கள் மூலம் கிடைத்த இடஒதுக்கீட்டை காப்பாற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். 69 சதவீதத்துக்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர் என நிரூபிக்க வேண்டும். அப்போதுதான், 69 சதவீதத்தை நிலை நாட்ட முடியும். நிரூபிக்காவிட்டால் நீதிமன்றம் ரத்து செய்துவிடும். இது முதல்வருக்கு நன்கு தெரியும். அவர் வேண்டுமென்றே கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.