உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதா?: அண்ணாமலை ஆவேசம்

மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதா?: அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா?' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய ஒப்புதல் வழங்கிய விவரமாவது முதல்வருக்குத் தெரியுமா?. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eid3yzxl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2009 - 2014ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ. 800 கோடி மட்டுமே. ஆனால் பிரதமர் மோடி இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். ஸ்டாலின் உண்மையில் இவை எல்லாம் தெரிந்துதான் பேசிக் கொண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நேரத்திற்கொரு பேச்சு என்று நாடகமாடி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா?. பிரதமர் மோடி வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். ஆனால் இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனி வரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Arachi
ஜூலை 23, 2024 06:30

கிணத்து தவளை இப்படித்தான் கத்திக் கொண்டிருக்கும். தமிழ் நாட்டில் தாமரை மொட்டு கூட விடமுடியாது. வடக்கே அறிந்தே செய்யும் தவறுகளுக்கு யார் பொறுப்பு தவறுகளை திருத்திக் கொள்ளும் பண்புள்ளவர்கள் தமிழர்கள்.


Kesavan
ஜூலை 22, 2024 22:44

மத்திய அரசு என்றாலே கேடுகெட்ட அரசு என்றுதான் பெயர் ஏழை மக்களை சாவடிப்பது அம்பானி அதானிய வாழ வைக்கிறது கடன் வாங்குவதற்கு ஜிஎஸ்டி வாங்குறது இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ஒரு கட்சி இதுக்கு ஒரு தலைவர் இது தமிழ்நாடு யாரு நல்லவன் யாரு கெட்டவன் யாரு நாட்டுக்கு தேவையானவை யார் நாட்டுக்கு தேவை இல்லாதவன் என்பதை எல்லாம் உணர்ந்து கொள்ளும் அறிவைப் பெற்ற நாடு படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ்நாடு அதனால் தான் சில்லறைகளால் இந்த அரசியலை செய்ய இயலவில்லை இந்த மாதிரி வெட்டிப் பேச்செல்லாம் படிக்கிறவனுக்கு உன்ன பத்தி கேவலமான அபிப்பிராயம் தான் ஏற்படும் போய் வேற வேலை இருந்தா பாரு எத்தனை லட்சம் கொடுத்தாலும் உனக்கு ஓட்டு போட மாட்டாங்க ஏன்னா இது தமிழ்நாடு


Apposthalan samlin
ஜூலை 22, 2024 14:14

சரி கடத்த பத்து வருஷம் gst எவ்வளவு வந்தது எவ்வளவு திருப்பி கொடுத்தது என்று சொல்ல முடியுமா ?


venugopal s
ஜூலை 22, 2024 14:10

கடந்த பத்து ஆண்டுகளில் மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது ,தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று நேரடியாக சொல்லாமல் கடந்த பத்து ஆண்டு கால பாஜக அரசின் நிதி ஒதுக்கீட்டை அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் பத்து ஆண்டுகளோடு ஒப்பிட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியாது!


முருகன்
ஜூலை 21, 2024 22:49

வீண் பழி இவர்கள் மட்டுமே செய்வது அடுத்தவர் செய்தால் கோபம் வலிக்கும் அல்லவா


ديفيد رافائيل
ஜூலை 21, 2024 22:25

நல்லவேளையாக Annamalai Coimbatore ல MP ஆகல.


S. Narayanan
ஜூலை 21, 2024 21:59

திமுக ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைப்புடன் இருக்கிறார்கள் என்ற நாடி துடிப்பு பற்றி கூட தெரியாமல் அரசு நடப்பது எவ்வளவு கேவலம். உண்மை விடியல் பிறக்கும் விரைவில்.


Saravanan Lic
ஜூலை 21, 2024 21:19

அண்ணாமலை ஜி சொல்வது சரி இந்த திமுக கட்சி வீண் பலி போடுவது வழக்கமாக உள்ளது முதலில் தமிழ்நாட்டில் அதிக கொலை நடக்கிறது அதை கட்டுப்படுத்த வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:06

புலிகேசிக்கு எழுதிக்கொடுத்து, இதை மட்டும் படிங்க தலைவா ..... பாஜகவுக்கு அல்லு உடும் ன்னு சொன்னது நம்ம சீக்மூளை பாமரனா இருக்குமோ ?


Velan
ஜூலை 21, 2024 20:04

ஆவேசம் அறிக்கை பைல்ஸ் No1 No 2 வேற உருப்படியா ஒன்னும் கிடையாது இது தேறாது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ