உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்

திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், மாரியம்மன் கோவில் திருவிழா, இன்று முதல், வரும், 14 வரை நடக்கிறது. இதனால் கோவில், சந்தைப்பேட்டை, திருவள்ளுவர் சாலை, காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.இதனால் இன்றும், நாளையும், மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.அதன்படி கனரக வாகனங்கள், பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் வழியே இயக்க தடை விதிக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள், ஏரி சாலை, போலீஸ் ஸ்டேஷன், அடிக்கரை, காளியாகோவில்புதுார், திப்பம்பட்டி வழியே குரால்நத்தம், கம்மாளப்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டும். அதேபோல் கம்மாளப்பட்டியில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள், திப்பம்பட்டி, காளியாகோவில்புதுார், அடிக்கரை, ஏரி சாலை வழியே சேலம் செல்ல வேண்டும்.இதுகுறித்து ஆய்வு செய்து, மற்ற நாட்களில் போக்குவரத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, பனமரத்துப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ