உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெட்டுப்போன உணவு அழிப்பு

கெட்டுப்போன உணவு அழிப்பு

கெட்டுப்போனஉணவு அழிப்புஆத்துார், நவ. 9-ஆத்துார், ராணிப்பேட்டை, கடைவீதி பகுதியில் உள்ள தனியார் பேக்கரி கடைகளில், கெட்டுப்போன நிலையில் உணவு பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் கிடைத்தது. நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, கடை வீதியில் உள்ள பேக்கரி கடைகளில், 25 கிலோ உணவு பொருட்கள், கெட்டுப்போன நிலையில் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர். உணவு மாதிரிகளை, ஆய்வுக்கு அனுப்பினர். கெட்டுப்போன, தரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்கக்கூடாது என, ஓட்டல், பேக்கரி, இனிப்பு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி