உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

வீரபாண்டி: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டி, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி குறுமைய அளவில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாணவர், மாணவியர் குழு, தனி நபர் போட்டிகள் முடிந்த நிலையில, கடந்த இரு நாட்களாக, தடகள போட்டி நடந்தது. இதில் பெண்கள் பிரிவில், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளி மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்-றனர். மல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.அதேபோல் குண்டு, வட்டு, ஈட்டி வீசுதல் போட்டிகளில் ஆட்-டையாம்பட்டி அரசு மகளிர் பள்ளி, 8ம் வகுப்பு மாணவி மெஹன்சிகா, 14 வயதுக்குட்பட்டோரில் முதலிடம், 10ம் வகுப்பு மாணவி மைதிலி, 17 வயதுக்குட்பட்டோரில் முதலிடம், பிளஸ் 2 மாணவி தர்ஷினிகா, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.பிளஸ் 2 மாணவி ரூபஸ்ரீ, 100 மீ., தடை ஓட்டம், 200 மீ., ஒட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்தார். இந்த, 4 மாணவியரும் தனி நபர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் பெற்-றனர். இவர்களுக்கு வேம்படிதாளம் அரசு பள்ளி தலைமையாசி-ரியை அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமூர்த்தி, பரிசு வழங்கி பாராட்டினர்.ஆண்கள் பிரிவில், நெய்க்காரப்பட்டி வித்யாபாரதி மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. ஆட்டையாம்-பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை