உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்ட குறுமைய அளவில் கைப்பந்து துாய மரியன்னை மாணவியருக்கு பாராட்டு

மாவட்ட குறுமைய அளவில் கைப்பந்து துாய மரியன்னை மாணவியருக்கு பாராட்டு

சேலம், ஆக. 29-சேலம் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்ட குறுமைய அளவில் மாணவியர் கைப்பந்து போட்டி, அரிசிபாளையத்தில் உள்ள துாய மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 24ல் நடந்தது. அதில் சேலம் ேஹாலி ஏஞ்சல், சாரதா மெட்ரிக், சாரதா வித்யாலயா, கோட்டை மகளிர், துாய மரியன்னை ஆகிய பள்ளிகளில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.அதில், 17, 19 வயது பிரிவுகளில் மாணவியருக்கு நடந்த போட்டியில் துாய மரியன்னை மகளிர் பள்ளி அணி மாணவியர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பாராட்டு விழா, சேலம், பேர்லண்ட்ஸில் உள்ள மாவட்ட கைப்பந்து கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். துணைத்தலைவர் அகிலா தேவி, ஆலோசகர் விஜயராஜ், செயலர் சண்முகவேல், துணை செயலர் ஹரிகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் இருதயா பிரான்ஸ், உடற்கல்வி ஆசிரியர் லீமா ரோஸ், பயிற்சியாளர் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ