உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேருக்கு வலை

டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேருக்கு வலை

சேலம்: மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ், நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. டிரைவராக, பிரபு, கண்டக்டராக பர்கத் அலி இருந்தனர். இரவு, 7:00 மணிக்கு டால்மியாபுரத்தில் வந்தபோது வழிவிடாமல், இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். டிரைவர் தொடர்ந்து, 'ஹார்ன்' அடித்ததால் வாகனத்தை நிறுத்திய இருவரும் பஸ்சில் ஏறி, பிரபுவை தாக்கினர். தடுக்க முயன்ற பர்கத் அலிக்கும் அடி விழுந்தது. பயணியர் கூச்சலிட, இருவரும் தப்பிச்சென்றனர். காயம் அடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சூரமங்கலம் போலீசார், தாக்குதல் நடத்திய இருவரையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ