உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சி செயலர்களுக்கு தண்ணீல கண்டம்குடிநீர் வரி வசூலிக்க முடியாமல் திணறல்

ஊராட்சி செயலர்களுக்கு தண்ணீல கண்டம்குடிநீர் வரி வசூலிக்க முடியாமல் திணறல்

சேலம்:ஊராட்சிகளில், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் போடப்பட்ட குடிநீர் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க முடியாமல், ஊராட்சி செயலர்கள் திணறுகின்றனர். சேலம் மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில், 385 ஊராட்சிகள் உள்ளன. அந்த ஊராட்சிகளை, 340 செயலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில், 6.45 லட்சம் வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு வைத்து, 5.70 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மீதி வீடுகளுக்கும் பணி நடக்கிறது.ஊராட்சியில் தலைவர்கள் பதவி வகித்தபோது, ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்தது. அதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் டிபாசிட் தொகை, மாத குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தலைவர்கள் ஓட்டுகளை பெறுவதில் பிரச்னை ஏற்படும் என கருதி, குடிநீர் இணைப்புக்கு டிபாசிட் தொகை, அதற்கு மாத கட்டணத்தை வசூலிக்கவில்லை. மாறாக இலவசம் பெயரில் இணைப்பு கொடுத்தனர்.தலைவர்களின் பதவி காலம் முடிந்து, தனி அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் வந்துள்ளது. இதனால் குடிநீர் இணைப்புக்கு டிபாசிட் தொகை, நிலுவையில் இருந்த மாத குடிநீர் கட்டணத்தை வசூலிக்க, அதிகாரிகள், ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கட்டணம் வசூலிக்க, வீடுதோறும் செயலர்கள் செல்கின்றனர். அப்போது மக்கள், 'வாரம் ஒரு நாள் தான் குடிநீரே வருகிறது. தலைவர்கள் சும்மாதான் பைப் போட்டார்கள். இப்போது பணம் கட்ட சொல்றீங்க' என, கேள்வி எழுப்பி, கட்ட மறுக்கின்றனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:தலைவர்கள் பதவி காலத்தில் மக்களிடம் டிபாசிட் தொகை வாங்காமல், குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் அமைதியாக இருந்தனர். தற்போது தனி அலுவலர்கள், டிபாசிட் தொகை, நிலுவையில் உள்ள மாத கட்டணத்தை, வரும், 31க்குள் வசூலித்து முடிக்கும்படி நெருக்கடி கொடுகின்றனர். மக்களோ, கட்டணம் செலுத்த முன்வருவதில்லை.ஆன்லைன் மூலம், 15 சதவீதம் மக்களே வரி செலுத்துகின்றனர். நாங்கள் வீடுதோறும் சென்று கேட்டாலும், கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. குடிநீர் வரி வசூல், 25 சதவீதத்துக்கு கீழ் உள்ள, 80 செயலர்களுக்கு, கடந்த, 4ல் விளக்கம் கேட்டு, அதிகாரிகள், 'குறிப்பாணை' வழங்கியுள்ளனர். அதிகாரிகள் வசூலிக்கும்படி நிர்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.லட்சக்கணக்கில் பாக்கிஊராட்சி நிர்வாகம், 1,000 லிட்டர் காவிரி குடிநீருக்கு, 13.50 ரூபாய் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கட்டணம் வசூலிக்க முடியாததால், ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளது. அதேபோல் மின்வாரியத்துக்கும் பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை