உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இளநீர் வியாபாரி தற்கொலையால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் கடன் வாங்கிய தாய், மகள் மீது வழக்கு

இளநீர் வியாபாரி தற்கொலையால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் கடன் வாங்கிய தாய், மகள் மீது வழக்கு

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே மூலப்பாதை, கோம்பைக்காட்டை சேர்ந்தவர் செங்கோட்டையன், 37. அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அருகே கொங்கணாபுரம், வெண்டனுாரை சேர்ந்த அலமேலு, அவரது மகள் கோகிலா, வெங்காயம் விற்கின்றனர். 4 ஆண்டுக்கு முன் செங்கோட்டையன், 5 லட்சம் ரூபாயை, கோகிலாவுக்கு கடனாக கொடுத்தார். அந்த பணத்தை, நேற்று முன்தினம் செங்கோட்டையன் கேட்டார். அப்போது தகாத வார்த்தையில் கோகிலா திட்டியுள்ளார். இதனால் செங்கோட்டையன், அலமேலுவிடம் கேட்க அவரும் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செங்கோட்டையன், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து செங்கோட்டையனின் தாய் பழனியம்மாள் புகார்படி, கோகிலா, அலமேலு மீது தற்கொலைக்கு துாண்டியதாக, கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்நிலையில் செங்கோட்டையனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை இடைப்பாடியில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது செங்கோட்டையனின் உறவினர்கள், கோகிலா, அலமேலுவை கைது செய்தால் மட்டுமே, உடலை அடக்கம் செய்வோம் எனக்கூறி, மின்மயானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, 'தற்கொலைக்கு துாண்டிய வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்களும் கைது செய்யப்படுவர். இறந்தவரின் உடலை நீங்கள் அடக்கம் செய்யுங்கள்' என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு உடலை அடக்கம் செய்துவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ