உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில தடகள தேர்வு முகாம் 120 வனத்துறையினர் ஆர்வம்

மாநில தடகள தேர்வு முகாம் 120 வனத்துறையினர் ஆர்வம்

சேலம் வனத்துறை சார்பில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள வன பணியாளர்களை மாநில தடகள போட்டிக்கு தேர்வு செய்யும் முகாம், சேலம், காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கியது.மண்டல வனப்பாதுகாவலர் கலாநிதி தொடங்கி வைத்தார். 100, 500, 1,000, 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கேரம், செஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், நீச்சல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 120க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், திறமைகளை வெளிப்படுத்தினர்.முதல் மூன்று இடங்களை பிடித்த பணியாளர்களை, தடகள பயிற்றுனர்கள் தேர்வு செய்தனர். சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, நாமக்கல் டி.எப்.ஓ., மாதவி, பயிற்றுனர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை