மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2025
சேலம், சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி ஊராட்சி, சேவம்பாளையத்தில் இயங்கி வரும் ஜீவா பப்ளிக் பள்ளியின்(சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், 12ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், தேசிய கொடி ஏற்றி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி தலைவர் அங்கமுத்து வரவேற்றார். விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு, பல்வேறு பட்ட விளையாட்டு, கல்வி சார் நடவடிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும் சேலம் மணி அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன மேலாண் நிர்வாகி மணி, நிர்வாகிகள் பிரேம் மணி, சுதா, போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற கூடுதல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன், பழனி பேசினர். பள்ளி தாளாளர் பத்மநாபன், செயலர் மணிவண்ணன், முதல்வர் மின்னல்கொடி, ஆடிட்டர் கவுரி, நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
16-Aug-2025