உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,435 மெகாவாட் மின் உற்பத்தி

1,435 மெகாவாட் மின் உற்பத்தி

மேட்டூர், மேட்டூர் பழைய, புதிய அனல் மின் நிலையங்கள் முறையே, 840, 600 என, 1,440 மெகாவாட்; அணை, சுரங்க, கதவணை மின் நிலையங்களில், 425 மெகாவாட் என, 1,865 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.இதில் பழைய அனல்மின் நிலையத்தின், 3வது அலகில் ஏற்பட்ட விபத்தால், பழுதுபார்ப்பு பணி நடக்கிறது. இதர, 3 அலகுகளில் தலா, 200 வீதம், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புது அனல்மின் நிலையத்தில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு மின் நிலையங்கள் வழியே நேற்று, வினாடிக்கு, 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், அணை, சுரங்க மின் நிலையங்களில், 160 மெகாவாட் மின் உற்பத்தியானது. மேலும் காவிரி குறுக்கே கட்டியுள்ள, 7 கதவணை மின் நிலையங்களில், 175 மெகாவாட் மின் உற்பத்தியானது. இதன்மூலம் மொத்தம், 1,435 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ