உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,452 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

1,452 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

சேலம்:சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். பெரியார் பல்கலை பதிவாளர் ராஜ், தேர்-வாணையர் முருகேசன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர். இதில், 2024 - 25ம் கல்வி ஆண்டில், பெரியார் பல்கலைக்கழகத்தால் பட்டம் பெற தகுதியான, 1,059 இளநிலை மாணவர்கள், 393 முதுநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும் பருவ தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், பதக்கம், அறக்கட்டளை நிதி மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ