உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால பைரவாஷ்டமியையொட்டி 16 வகை அபிேஷக பூஜை

கால பைரவாஷ்டமியையொட்டி 16 வகை அபிேஷக பூஜை

தலைவாசல்: கால பைரவர் அவதரித்த நாளான நேற்று கால பைரவாஷ்டமி-யாக கொண்டாடப்பட்டது. இதனால் சேலம் மாவட்டம் தலை-வாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், கால பைர-வருக்கு பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பைரவர் அருள்பா-லித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்யங்கி-ராதேவி, ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் தேவி, பைரவர் அருள்பாலித்தனர். முன்னதாக உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. தென்பொன்-பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்கா-ரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். வீரகனுார் கங்கா சவுந்த-ரேஸ்வரர், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ