மேலும் செய்திகள்
பீரோவை உடைத்து 10 பவுன் ரூ.80 ஆயிரம் திருட்டு
02-Oct-2025
சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் கிராமம், சுண்டக்காயன்காடு பகுதியில், கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.சங்ககிரி தாலுகா, தேவண்ணகவுண்டனுார் கிராமம், சுண்டக்காயன் காடு பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி மல்லிகா, 52. இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கட்டட கூலி வேலைக்கு மல்லிகா சென்று வருகிறார். இவருக்கு முத்துகுமார் என்ற மகனும், பொன்னியம்மாள் என்ற மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி இவரது வீட்டின் அருகே வேறு வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் மல்லிகா, இடைப்பாடிக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த இரட்டை வட செயின், தோடு, மோதிரங்கள் என, 17 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரையடுத்து, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
02-Oct-2025