உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

சேலம், சேலம் வீராணம், தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 53, கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 36, தமிழ்சூர்யா, 25, ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 25ல் மது போதையில் சக்திவேலை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சக்திவேல் காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சக்தி வேல் கொடுத்த புகார்படி, சதீஷ்குமார், தமிழ் சூர்யா ஆகியோரை நேற்று முன்தினம் வீாரணம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி