உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்ச வழக்கில் சிக்கிய 2 மின் ஊழியர் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் சிக்கிய 2 மின் ஊழியர் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் சிக்கிய2 மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'சேலம், நவ. 24-சேலம், காமநாயக்கன்பட்டியை சேர்ந்த லேத்பட்டறை உரிமையாளர் மணிவண்ணன், 35. இவர் வீட்டின் மேல்தளத்தில் கட்டும் வீட்டுக்கு, மின் இணைப்பு கேட்டு, மல்லமூப்பம்பட்டி மின்பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் மின் ஆய்வாளர் மணி, 46, போர்மேன் ராதாகிருஷ்ணன், 57, லஞ்சம் கேட்டனர்.மணிவண்ணன், சேலம் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, 3,000 ரூபாயை லஞ்சமாக மணிவண்ணன் கொடுக்க, அதை வாங்கிய ஆய்வாளர், போர்மேன், கையும் களவுமாகி சிக்கி கைதாகினர். இதனால் மணி, ராதாகிருஷ்ணனை, 'சஸ்பெண்ட்' செய்து, மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு உத்தரவிட்டார். தொடர்ந்து துறை விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ