உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு இன்ஸ்பெக்டர் வீட்டில் 2 கிலோ வெள்ளி திருட்டு

ஓய்வு இன்ஸ்பெக்டர் வீட்டில் 2 கிலோ வெள்ளி திருட்டு

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, சந்தை ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 63. ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், மனைவியுடன், கடந்த, 19ல், ைஹதராபாத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்.நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 4 வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குங்கும சிமிழ், கொலுசு, கிண்ணம் என, 2 கிலோ கொண்ட வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அவர் தகவல்படி, தம்மம்பட்டி போலீசார், கைரேகை நிபுணர் குழுவினர், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, 'சிசிடிவி' பதிவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ