வெவ்வேறு இடங்களில் விபத்து லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி, காட்டுவளவை சேர்ந்-தவர் பிரசாந்த், 31. லாரி வைத்து தொழில் செய்து வந்த இவ-ருக்கு திருமணமாகவில்லை. கடந்த, 28 இரவு, 8:00 மணிக்கு, விமான நிலையம் எதிரே, சேலம் - தர்மபுரி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வேகமாக சென்ற பொலிரோ சரக்கு வாகனம், சாலையில் சென்ற சில வாகனங்கள் மீது மோதி, பிரசாந்த் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். சரக்கு வாகனத்தை விட்டு தப்பி ஓடிய டிரைவர் குறித்து ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.நெல் அறுவடை இயந்திரம் தேவூர் அருகே சென்றாயனுாரை சேர்ந்தவர் மாரிமுத்து, 70. இவரது மனைவி கண்ணாயா, 68, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு மாரிமுத்து, சென்றாய-னுாரில் உள்ள அவரது மகன் பாலுசாமியின் மளிகை கடைக்கு சென்றார். பின் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்-போது திருவண்ணாமலையை சேர்ந்த விநாயகம், 39, ஓட்டி வந்த நெல் அறுவடை இயந்திரம் மோதியதில், மாரிமுத்து படுகாயம் அடைந்தார். மக்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பிய நிலையில், அவர் இறந்தது தெரியவந்தது. தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.