ரோந்து பணியில் அலட்சியம்2 போலீசார் இடமாற்றம்
தலைவாசல்தலைவாசல் அருகே, வீரகனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், இரவு ரோந்து பணி குறித்து, நேற்று முன்தினம் இரவு, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பணியில் அலட்சியமாக இருந்த, எஸ்.ஐ., தங்கவேல், எஸ்.எஸ்.ஐ., செல்வம் ஆகியோரை, சேலம் ஆயுதப்படைக்கு தற்காலிக இடமாற்றம் செய்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார்.