உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் உறுதி

2 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் உறுதி

ஏற்காடு, ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சி சின்னமதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி, மாணவ, மாணவியரின் பெற்றோர், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து குழந்தைகளை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்றும், பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.இதனால் சின்னமதுார் பள்ளிக்கு சென்ற ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் கிரிஜா, தலைமை ஆசிரியர் சத்யராஜ்(பொ), மாணவ, மாணவியரின் பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தினர். அப்போது, 'மாரமங்கலம் நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் பிரேம்குமார், சின்னமதுார் பள்ளிக்கு தற்காலிக கணித ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் இருப்பார். ஆங்கில வகுப்பு நடத்த, தற்காலிக ஆசிரியை சுதா நியமிக்கப்பட்டுள்ளார்' என, கிரிஜா கூறினார். இதையடுத்து, அனைத்து பாட பிரிவுகளுக்கும் நிரந்தர ஆசிரியர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மாணவ, மாணவியரின் பெற்றோர், 'நாளை(இன்று) முதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்' என கூறிச்சென்றனர்.இதுகுறித்து கிரிஜா கூறுகையில், ''வரும், 24ல் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. அதில் ஆசிரியர்கள் யாரேனும், இப்பள்ளிக்கு வர விருப்பப்பட்டால் அவர்கள் நிரந்தர ஆசிரியராக பணி அமர்த்தப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை