போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
சேலம், சேலத்தில், போதை மாத்திரைகளை விற்பனை செய்த, இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சேலம் கிச்சிபாளையம் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, காந்திநகர், சுடுகாடு அருகில் இருவர் போதை மாத்திரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கிச்சிபாளையம், கஸ்துாரிபாய் தெரு பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன், அஜய், 20, என இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதை மாத்திரைகளையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.