மேலும் செய்திகள்
ஆற்றில் குளித்த மாணவர் முதலை கடித்து உயிரிழப்பு
15-Sep-2025
செங்கம், செங்கம் அருகே பைக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில், 2 வாலிபர்கள் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலை குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ்வரன், 21, குமார், 28, முத்துகுமார், 29. மூவரும், ஒரே ஹீரோ பைக்கில் நேற்று காலை, 11:00 மணியளவில் சென்னை - பெங்களூரு சாலையில், திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலையிலிருந்து - கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, லோகேஷ்வரன் உள்ளிட்டோர் சென்ற பைக் மீது மோதியதில், மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே லோகேஷ்வரன் பலியானார். குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் குமார் உயிரிழந்தார். பாச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15-Sep-2025