வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
பேரணாம்பட்டு : பேரணாம்பட்டில், வீட்டின் பூட்டை உடைத்து, 20 பவுன் நகை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் தமீம், 32. இவர் மனைவி ரஷிதா, 30. தமீம், புதுச்சேரியில், தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பேரணாம்பட்டில் ரஷிதா குழந்தைகளுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியிலுள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் வைத்திருந்த, 20 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.