250 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
சேலம்: வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், இன்று முதல் பிப்., 3 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்-றன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூர், மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதிக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணா-மலை, ஈரோடு, காஞ்சிபுரத்துக்கும், ஓசூரில் இருந்து சேலம், சென்னை, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்கு-வரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.inஎன்ற இணைய-தளம் வழியே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என, நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.