உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மான்போர்ட் சமுதாய பள்ளியில் 25வது விளையாட்டு விழா

மான்போர்ட் சமுதாய பள்ளியில் 25வது விளையாட்டு விழா

ஏற்காடு, ஏற்காடு, கொம்புதுாக்கியில் உள்ள மான்போர்ட் சமுதாய பள்ளியின், 25வது விளையாட்டு விழா, மாணவ, மாணவியர் அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கியது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், உடலசைவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற, சேரன் இல்லம் அணிக்கு, கோப்பை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையில் சேரன் இல்லமும், தேசிய மாணவர் படை இயக்கமும், சிறந்த அணிவகுப்புக்கு கோப்பையை பெற்றனர். முன்னதாக, தமிழக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு நடத்தப்படும் இப்பள்ளியில், படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, ஒழுக்கம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. 25 ஆண்டுகள் மலைவாழ் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு பணி செய்து வரும் பள்ளி முதல்வர் ஜார்ஜை பாராட்டுகிறேன்,'' என்றார். தொழிலதிபர் ரசாக், மான்போர்ட் சகோதரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை