உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,640 வீரர், வீராங்கனைக்கு ரூ.42 லட்சம் பரிசு வழங்கல்

2,640 வீரர், வீராங்கனைக்கு ரூ.42 லட்சம் பரிசு வழங்கல்

சேலம், சேலம் மாவட்ட அளவில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேந்திரன் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, 54,157 பேர் பதிவு செய்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், மக்கள் என, 5 பிரிவாக, 15 வகை போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட்டன. அவற்றில், முதல் மூன்று இடங்களில் வென்ற, 2,640 வீரர், வீராங்கனைகளைக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 42.08 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவின் ஒன்றியம் சார்பில் வெண்ணிலா, சாக்லெட், பட்டர் ஸ்காட்ச் மினிகோன் ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ