மேலும் செய்திகள்
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
03-Aug-2026
சேலம்:தமிழ்நாடு அரசு நர்சு சங்கம் சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.அதில் அரசு மருத்துவமனைகளில் புது பணியிடங்களை தோற்றுவிக்காமல் ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரவல் செய்த ஆணையை ரத்து செய்தல்; செவிலியர் பெயரை செவிலிய அலுவலர் என மாற்றுதல்; 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்து விட்டு காலமுறை ஊதியம் வழங்குதல் ஆகிய, 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட செயலர் வளர்மதி, பொருளாளர் விஜயலட்சுமி, மாநில துணைத்தலைவர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
03-Aug-2026