உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

கெங்கவல்லி :கெங்கவல்லி அருகே கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதந்தோறும், 10 கர்ப்பிணியருக்கு பிரசவம் நடக்கிறது. நேற்று மூலப்புதுார் கர்ப்பிணி திவ்யா, 23, என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அதேபோல் கடம்பூர் நந்தினி, 23, நரிப்பாடி திவ்யபாரதி, 23, ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று, 3 கர்ப்பிணியருக்கும் சுகப்பிரசவம் நடந்தது. இதனால் வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி, கூடமலை மருத்துவர் ஹர்ஷிதா, செவிலியர்களை, மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !