30 பேர் மருத்துவ குழு 5 கார்களில் கரூர் விரைவு
சேலம்;கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தேவி மீனாள் தலைமையில் கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட சிறப்பு மருத்துவ குழுவினர், 30 பேர், 5 கார்களில் நேற்று கரூர் புறப்பட்டனர்.