மேலும் செய்திகள்
இந்த வழி வருவதென்றால் மனசில் 'திக்... திக்'
08-Sep-2025
தலைவாசல் :தம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய கும்பல், அங்கிருந்த பொருட்களை மயானத்தில் வீசினர். இதனால் பெண் உள்பட, 30 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல், தென்குமரையை சேர்ந்த, தொழிலாளி ராஜேந்திரன், 61. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உஷாவுக்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, உஷா உள்ளிட்டோர், ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரியை தாக்கினர். தொடர்ந்து வீட்டை சூறையாடிய கும்பல், அங்கிருந்த சேர், டேபிள், மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள், படுக்கை உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களை எடுத்து, அதே பகுதியில் உள்ள மயானத்தில் வீசினர். பின் மக்கள், தம்பதியை மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து ராஜேந்திரன், தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதில், 'என்னையும், மனைவியையும் தாக்கி, வீட்டில் இருந்த, 70,000 ரூபாய், தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். வீட்டில் வைத்திருந்த பொருட்களை மயானத்தில் வீசியுள்ளனர்' என கூறியிருந்தார். இதனால் உஷா உள்பட, 30 பேர் மீது, 7 பிரிவில் வழக்குப்பதிந்து, அனைவரையும் தேடுகின்றனர்.
08-Sep-2025