மேலும் செய்திகள்
மகளிர் கல்லுாரியில் பணி நியமன ஆணை
30-Mar-2025
400 பேருக்குபணி ஆணைசேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்ற குழுமம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் செண்பலெட்சுமி தொடங்கி வைத்தார். கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 30 முன்னணி நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்தனர்.கல்வி தகுதி அடிப்படையில், மாணவ, மாணவியர், 400 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல்வர், பணிநியமன ஆணையை வழங்கி பாராட்டினார். பேராசிரியர்கள் திருமுருகன், சுரேஷ்பாபு, சரவணகுமார், பானுமதி, கண்ணன் உள்பட வேலை வழங்கிய நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
30-Mar-2025