உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4,770 குளிர்பான பாட்டில் பறிமுதல் போலி லேபிள் ஒட்டி விற்றவர் கைது

4,770 குளிர்பான பாட்டில் பறிமுதல் போலி லேபிள் ஒட்டி விற்றவர் கைது

சேலம், சேலம், லைன்மேட் டில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில், பிரபல நிறுவனங்களின் லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக, சேலம் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி தலைமையில் போலீசார், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, பிரபல நிறுவனங்கள் பெயர் ஒட்டியிருந்த, 4,770 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதன் நிறுவன உரிமையாளர், காதர்பாட்ஷா, 47, என தெரிந்தது. அவரையும், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை