மேலும் செய்திகள்
மாஜி தி.மு.க., தலைவி கணவர் மீது தாக்குதல்
22-Jul-2025
ஓமலுார்: முன்விரோதத்தில், தம்பதி உள்பட, 3 பேரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில், கூட்டாளிகள், 5 பேரை கைது செய்து, முக்கிய குற்றவாளியை, போலீசார் தேடுகின்றனர்.ஓமலுார் அருகே காமலாபுரம், கலர்காட்டை சேர்ந்தவர் விஷ்வா, 22. பொட்டியபுரம், பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 27. இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. இருவர் மீதும், ஏற்கனவே ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது.இந்நிலையில் நவீன்குமார் தலையில் வெட்டிய வழக்கில், விஷ்வா சிறைக்கு சென்றுவிட்டு வந்தார். இந்த முன்விரோ-தத்தில், நேற்று முன்தினம் இரவு, பொட்டியபுரம் அரச மரம் அருகே, அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு, 11:30 மணிக்கு, நவீன்குமார், அவரது கூட்டாளிகள், 5 பேருடன் சேர்ந்து, விஷ்வா வீட்டுக்கு சென்று, அவரை கொல்ல முயன்றார். தடுக்க முயன்ற விஷ்வாவின் தந்தை பெரியசாமி, 45, தாய் ஸ்ரீதேவி, 40, ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் விஷ்வா உள்பட, 3 பேரும், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டனர். இதுதொடர்பாக பொட்டியபுரத்தை சேர்ந்த, பெயின்டர் நந்த-குமார், 25; லாரி டிரைவர் பிரவீன்குமார், 26; வெல்டர் கார்த்திக், 27; கூலித்தொழிலாளிகள் மணிகண்டன், 24, விஜயகுமார், 30, ஆகியோர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, ஓமலுார் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் நவீன்குமார் தலைமறைவானதால், அவரை தேடுகின்றனர்.
22-Jul-2025