உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர் படுகொலை 6 பேருக்கு குண்டாஸ்

வாலிபர் படுகொலை 6 பேருக்கு குண்டாஸ்

சேலம், துாத்துக்குடி, ஆரோக்கியபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார், 25. இவர், கொலை வழக்கில், சேலம், அஸ்தம்பட்டி போலீசில் கடந்த ஜூலை, 15ல் கையெழுத்திட்ட பின், மணக்காட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது துாத்துக்குடியை சேர்ந்த, 10 பேர் கும்பல், மதன்குமாரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.அவர்களில் இசக்கிராஜா, 35, விக்னேஷ், 20, பிரவீன்ஷா, 22, கிருஷ்ணகாந்த், 28, செல்வபூபதி, 26, முத்து ரிஷிகபூர், 28, ஆகியோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி நேற்று உத்தரவிட்டார். பிறப்பித்தார். அதன்படி, 6 பேரும், சேலம் மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டனர். அவர்களில் இசக்கிமுத்து, விக்னேஷ் தவிர, மீதமுள்ள, 4 பேரும், பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி