உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7 அடியில் வளர்ந்த 80,000 தென்னை நாற்றுகள் தேக்கம்விற்பனை அறிவிப்பு இல்லாததால் ரூ.52 லட்சம் நஷ்டம்

7 அடியில் வளர்ந்த 80,000 தென்னை நாற்றுகள் தேக்கம்விற்பனை அறிவிப்பு இல்லாததால் ரூ.52 லட்சம் நஷ்டம்

7 அடியில் வளர்ந்த 80,000 தென்னை நாற்றுகள் தேக்கம்விற்பனை அறிவிப்பு இல்லாததால் ரூ.52 லட்சம் நஷ்டம்ஓமலுார்:அரசு விதை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட, 80,000 தென்னை நாற்றுகள், 7 அடி வளர்ந்த நிலையில், விற்பனை செய்ய அறிவிப்பு இல்லாததால், 52 லட்சம் ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு விதைப்பண்ணையில், 2023, 'காவியா டி.பி.,' திட்டத்தில், 3 ஏக்கரில், 80,000 நெட்டை (அரசம்பட்டி நாட்டு ரகம்)தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2023 நவ., 23ல், 80,000 கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஒரு நெட்டை ரக நாற்று உற்பத்திக்கு, 50 முதல், 54 ரூபாய் செலவிடப்படுகிறது. 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.விவசாயிகள், 3 அடி தென்னை நாற்றுகளை ஆர்வமுடன் வாங்குவர். பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நாற்றுகள், தற்போது, 7 அடி வளர்ந்துள்ளன. இதை வாங்கினால், 5 அடிக்கு ஆழமாக தோண்டி, நாற்றை சுற்றி காற்றுக்கு சாயாமல் குச்சியால் முட்டு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது விவசாயிகளுக்கு கூடுதல் பணிச்சுமை. இதனால் விவசாயிகள் வாங்க முன்வரவில்லை.இதுகுறித்து காடையாம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமரவேலிடம் கேட்டபோது, ''2023ம் ஆண்டு தென்னை பண்ணை என்பது வேளாண் துறையிடம் இருந்தது. 9 மாதங்களுக்கு முன், தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நாற்றுகள் விற்பனை குறித்து முழு விபரம் வரவில்லை,'' என்றார்.காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வத்திடம் கேட்டபோது, ''இதுகுறித்து பலமுறை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒரு குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். இதுவரை முறையான அறிவிப்பு வரவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். உரிய காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், 80,000 தென்னை நாற்றுகள் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. 52 லட்சம் ரூபாய் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ