உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோஷ்டி தகராறில் 7 பேர் கைது

கோஷ்டி தகராறில் 7 பேர் கைது

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி, முனியப்பன் கோவிலில் கடந்த வாரம் நடந்த எருதாட்டத்தின்போது, காளைகளை விடுவதில் இரு கோஷ்டிகள் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நைனாம்பட்டியில், அந்த இரு கோஷ்டிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித், 23, புகார்படி, எஸ்.பாப்பாரப்பட்டி குணா, 25, சுரேஷ்குமார் 27, சிவசங்கர், 28, கருணாகரன், 19 ஆகியோரை, ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.மற்றொரு கோஷ்டியை சேர்ந்த, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 42, புகார்படி, வெங்கடேஷ், 30, விஜயகுமார், 35, அஸ்தம்பட்டி ஜாபர் சாதிக், 34, ஆகியோரை கைது செய்தனர். மேலும், 14 பேரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ