உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில் ரூ.பல கோடி முறைகேடு புகார் 15 பேர் குழு விசாரணை தொடக்கம்

மாநகராட்சியில் ரூ.பல கோடி முறைகேடு புகார் 15 பேர் குழு விசாரணை தொடக்கம்

சேலம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சேலம் மாநகராட்சியில் பேட்டரி வாகனங்கள் வாங்கியதில், 50 லட்சம் ரூபாய் இழப்பு; கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகத்தில், 2016 முதல், 19 வரை, 87 லட்சம் ரூபாய் கையாடல்; மாநகராட்சி பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையை, சிக்கன நாணய சங்கத்துக்கு செலுத்தாமல் பல கோடி ரூபாய் முறைகேடு; குடிநீர் இணைப்பு வழங்கியதில் பல கோடி ரூபாய் இழப்பு; மாநகராட்சி கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு முறைகேடு; சரிவர வாடகை வசூலிக்காததால் அம்மாபேட்டை வார்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு; சேலம் புதுபஸ் ஸ்டாண்டில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் உள்பட 18 புகார்கள் நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனருக்கு சென்றது.இதனால் கூடுதல் நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தலைமையில் உதவியாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் என, 15 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று, சேலம் மாநகராட்சியில் விசாரணையை தொடங்கினர். ஒவ்வொரு புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தனித்தனியே விசாரித்து, வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. பின் கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, 2ம் நாளாக இன்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை