உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி சாவு முதியவர் மீது கொலை வழக்கு

தொழிலாளி சாவு முதியவர் மீது கொலை வழக்கு

தொழிலாளி சாவுமுதியவர் மீது கொலை வழக்குவாழப்பாடி, அக். 23-வாழப்பாடி, பேளூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தேவன், 50. கூலித்தொழிலாளியான இவர், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நிழற்கூடத்தில் கடந்த, 17 இரவு, 11:00 மணிக்கு துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது துக்கியாம்பாளையத்தை சேர்ந்த தனபால், 63, என்பவர், 'இது வழக்கமாக நான் துாங்கும் இடம்' என கூறி தகராறில் ஈடுபட்டார். பின் கல்லை எடுத்து தேவன் தலையில் வீசியதில் மண்டை உடைந்தது. படுகாயம் அடைந்த தேவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வி.ஏ.ஓ., அண்ணாமலை புகார்படி, வாழப்பாடி போலீசார், அடிதடி வழக்கு பதிந்து தனபாலை கைது செய்தனர். ஆனால் நேற்று தேவன் உயிரிழந்தார். இதனால் தனபால் மீதான வழக்கை கொலையாக மாற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ