உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு வழங்கிய ரூ.10,000 நிதி பள்ளிக்கு கொடுத்த நல்லாசிரியர்

அரசு வழங்கிய ரூ.10,000 நிதி பள்ளிக்கு கொடுத்த நல்லாசிரியர்

ஆத்துார் :ஆத்துார், மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, வேதியியல் ஆசிரியர் பாபு. இவருக்கு தமிழக அரசு சார்பில், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்பட்டது. இதனால் அவருக்கு, பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அதில் பாபு, விருதுடன் வழங்கிய, 10,000 ரூபாயை, பள்ளி வளர்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து அவரை, அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். மேலும், வரும் கல்வியாண்டு முதல், 10, பிளஸ் 2வில், முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா, 1,000 ரூபாய், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ