ஆதி யோகி சிவ ரத யாத்திரை திரளான பக்தர்கள் வழிபாடு
கெங்கவல்லி: கோவையில் உள்ள ஈஷா சிவன் கோவிலில், மாசி மஹா சிவராத்-திரி நாளில் மஹா யாக பூஜை நடக்க உள்ளது. அதில் மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படி, கோவை ஈஷா மையத்திலிருந்து, கடந்த டிச., 24 முதல், ஆதியோகி சிவன் ரத யாத்திரை தொடங்கியது. நேற்று தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, ஆத்துாரில் வலம் வந்தது. வழி நெடுக திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கெங்கவல்லியில் மக்கள் தீபாராதனை காட்டி, சிவனை வழிபட்-டனர்.