காணாமல் போனவர் காரில்இறந்து கிடந்ததால் பரபரப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள, 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 51. இவர் டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 29ம் தேதி மதியம், தனக்கு சொந்தமான காரில் சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணியளவில் கார் ஒன்று கரட்டுபாளையம் அருகே இருப்பதாக, முருகேசன் மனைவி வள்ளியம்மாளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து வள்ளியம்மாள், இவரது மகன் இளையபாரதி ஆகியோர் சென்று பார்த்தபோது முருகேசன் காரின் பின்சீட்டில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசில் வள்ளியம்மாள் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.