உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு நெருக்கடி கலெக்டர் ஆபீீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

ரூ.3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு நெருக்கடி கலெக்டர் ஆபீீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

ரூ.3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு நெருக்கடிகலெக்டர் ஆபீீசில் பெண் தீக்குளிக்க முயற்சிசேலம், அக். 25-இருவரிடம் வாங்கிய, 3 லட்சம் ரூபாய் கடனுக்கு, 15 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில் மேலும், 25 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததோடு வீட்டை அபகரிக்க முயன்றதால், கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.ஓமலுார் அருகே வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மனைவி பழனியம்மாள், 43. இவரது மகன் சந்தோஷ், 23, உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று மதியம், 12:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு பழனியம்மாள், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார், அவரை தடுத்து பேச்சு நடத்தினர்.அப்போது சந்தோஷ் கூறுகையில், ''தங்கை மருத்துவ செலவுக்கு அதே பகுதியை சேர்ந்த, 2 பேரிடம் தலா, 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றோம். அசல், வட்டி சேர்த்து, 15 லட்சம் ரூபாய் கட்டிவிட்டோம். மேலும், 25 லட்சம் ரூபாய் கட்ட வற்புறுத்தினர். இதுகுறித்து கேட்டதற்கு எங்கள் தந்தைக்கு சொந்தமான, 6 சென்ட் நிலத்தில் உள்ள வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்றி விட்டனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இரு நாட்களாக தங்க வசதியின்றி தவிக்கிறோம். இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். மாவட்ட நிர்வாகம் விசாரித்து கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின் போலீசார், 4 பேரையும் டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ