ரோந்து போலீசாருக்கு விபத்து முதலுதவி பயிற்சி
சேலம்: சேலம் மாநகர போலீசில், 'பேட்ரோல்' வாகனம் மூலம், ரோந்து செல்லும் போலீசாருக்கு விபத்து முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி, அன்னதானப்பட்டியில் நேற்று நடந்தது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தொடங்கி வைத்தார். விபத்தில் சிக்கியவருக்கு கை, காலில் அதிகளவு ரத்தம் வெளியேறினால் அதை உடனே தடுப்பது, அவரச நேரத்தில் எவ்வாறு செயல்படுவது, யாரை தொடர்பு கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு வித பயிற்சிகள் அளிக்கப்பட்டன. துணை கமிஷனர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள், ரோந்து போலீசார் பங்கேற்றனர். இன்றும் பயிற்சி நடக்கிறது.